Wednesday, 28 September 2016

கறிவேப்பிலைக் குழம்பு

கறிவேப்பிலைக் குழம்பு

கறிவேப்பிலைக் குழம்பு

 

தேவையானவை:

 கறிவேப்பிலை - 2 கப்

 புளி - பெரிய நெல்லிக்காய் அளவு (கரைத்துக் கொள்ளவும்)

 மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

 கடுகு - அரை டீஸ்பூன்

 வெந்தயம் - அரை டீஸ்பூன்

 நல்லெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்

 காய்ந்த மிளகாய் - 8 (இரண்டாக உடைத்து போடவும்)

 கடலைப்பருப்பு - அரை டேபிள்ஸ்பூன்

 துவரம்பருப்பு - அரை டேபிள்ஸ்பூன்

 உளுத்தம்பருப்பு - அரை டேபிள்ஸ்பூன்

 சீரகம் - அரை டீஸ்பூன்

 பெருங்காயம் - 1 சிட்டிகை

 எண்ணெய் - 2 டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு, கறிவேப்பிலையைச் சேர்த்து வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் பொடிக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பெருங்காயம் போட்டுத் தாளித்து, புளிக்கரைசல் ஊற்றி உப்புகளோடு, பச்சை வாசனை போக கொதிக்க விடவும். இதில் மஞ்சள் தூள் சேர்த்து  மிதமான தீயில் கொதிக்க விடவும். இறக்குவதற்கு முன்பு கறிவேப்பிலைப் பொடி தூவி, இறக்கி மூடி வைத்து ஐந்து நிமிடம் கழித்துப் பரிமாறவும். இந்தக் குழம்பு தொக்கு பதத்தில் இருக்கும். எனவே, அளவோடுப் பரிமாறவும்.

No comments:

Post a Comment