Thursday, 29 September 2016

குச்சி முறுக்கு

குச்சி முறுக்கு

குச்சி முறுக்கு

 

தேவையானவை:

 பச்சரிசி மாவு - 100 கிராம்

 உளுந்து மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்

 மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப)

 எள், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்

 பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்

 வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

 எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

 உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

கனமான அடிப்பகுதியுள்ள பாத்திரத்தில் அரை கப் நீர்விட்டு நன்றாகக் கொதிக்கவிட்டு... உப்பு, பச்சரிசி மாவு, உளுந்து மாவு சேர்த்து நன்கு கிளறவும். கெட்டியாக வந்ததும் இறக்கி வெண்ணெய், எள், சீரகம், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து, கைபொறுக்கும் சூட்டில் அந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். ஓர் உருண்டையை எடுத்து, மெல்லிய கோடு போல் ஆக்கி, பிறகு அதை '' மாதிரி செய்து, இறுதியில் வட்டம் மாதிரி செய்துவிடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவிட்டு, செய்துவைத்தவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு பொரித்து எடுக்கவும்.

No comments:

Post a Comment