Wednesday, 28 September 2016

காஜு பட்டர் மசாலா

காஜு பட்டர் மசாலா

காஜு பட்டர் மசாலா

 

தேவையானவை:

 

 முந்திரிப்பருப்பு (காஜு) - 15 கிராம் (வறுப்பதற்கு)

 முந்திரிப்பருப்பு - 150 (அரைப்பதற்கு)

 வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

 பெங்களூரு தக்காளி - 5

 பிரிஞ்சி இலை - 1

 இஞ்சி-பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்

 பச்சைமிளகாய் - 2

 மிளகாய்த்தூள், சர்க்கரை - தலா அரை டீஸ்பூன்

 ஃப்ரெஷ் க்ரீம் - 50 மில்லி

 கஸூரி மேத்தி

(காய்ந்த வெந்தயக்கீரை) - ஒரு டீஸ்பூன்

 எண்ணெய் - 25 மில்லி

 உப்பு - தேவையான அளவு

 கொத்தமல்லித்தழை - சிறிதளவு

 

செய்முறை:

 

பெங்களூரூ தக்காளியைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் விட்டு உருகியதும், முந்திரியைச் சேர்த்து வறுத்தெடுத்து தனியாக வைக்கவும். இதே வாணலியில் பிரிஞ்சி இலை, தக்காளியைச் சேர்த்து வதக்கவும். தீயைக் குறைத்து, அரைக்கக் கொடுத்துள்ள முந்திரியைச் சேர்த்து நன்கு வதக்கி அடுப்பை அணைக்கவும். கலவை ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும்.

 

வாணலியில், எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு தீயைக் குறைத்து, அரைத்தவற்றைச் சேர்த்து ஐந்து நிமிடம் நன்றாக வதக்கவும். இத்துடன் பச்சைமிளகாய், மிளகாய்த்தூள், சர்க்கரை, உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு வறுத்த முந்திரி மற்றும் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து சிறிது நேரம் வதக்கிய பிறகு, கஸூரி மேத்தி, கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.

No comments:

Post a Comment