Wednesday, 28 September 2016

சிக்கன் சால்னா

சிக்கன் சால்னா

சிக்கன் சால்னா

 

தேவையானவை:

 

 சிக்கன் - அரை கிலோ (மீடியம் சைஸ் துண்டுகளாக்கவும்)

 பச்சைமிளகாய் - 3

 பெரிய வெங்காயம் - 2

 தக்காளி - 4

 இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்

 மிளகாய்த்தூள் - முக்கால் டேபிள்ஸ்பூன்

 கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்

 மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டேபிள்ஸ்பூன்

 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

 தேங்காய்த்துருவல் - 100 கிராம்

 பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 1

 கொத்தமல்லித்தழை - சிறிதளவு

 எண்ணெய் - 50 மில்லி

 உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

 

வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். சிக்கனை நன்றாகக் கழுவி ஒரு பவுலில் சேர்த்து, அதனுடன் அரை டேபிள்ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, கால் டீஸ்பூன் மஞ்சள்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி 15 நிமிடம் ஊற வைக்கவும்.

இனி மிக்ஸியில், தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய், மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள், கரம் மசாலா, மீதம் இருக்கும் மஞ்சள்தூள் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது, தேங்காய்த்துருவல் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

 

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்துப் பொரிந்ததும், அதனுடன் அரைத்து வைத்திருக்கும் கலவையைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு ஊறிய சிக்கன் கலவை மற்றும் அதன் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து மூடி, நன்கு வேக விடவும். மூடியைத் திறந்து கிளறிவிட்டு, மீண்டும் மூடி போட்டு சில நிமிடங்கள் கொதிக்க விடவும். இதில் கொத்தமல்லித்தழை தூவி சூடாகப் பரிமாறவும்.

No comments:

Post a Comment