மசாலா காளான் சேவை
மசாலா காளான் சேவை
தேவையானவை:
மொட்டுக் காளான் - 200 கிராம்
ரெடிமேட் இடியாப்ப சேவை - 250 கிராம்
பெரிய வெங்காயம் - 75 கிராம்
தக்காளி - 100 கிராம்
பச்சைமிளகாய் - 4
தேங்காய்த்துருவல் - 25 கிராம்
இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
முந்திரி - 10 கிராம்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - 10 மில்லி லிட்டர்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
ரெடிமேட் இடியாப்ப சேவையை அதன் பாக்கெட்டில் குறிப்பிட்டுள்ளபடி வேகவைத்தெடுக்கவும். காளானை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்துகொள்ளவும். காளான், வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கித் தனியே வைத்துக்கொள்ளவும். பிறகு, வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும், வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி, கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். இத்துடன் நறுக்கி வைத்துள்ள காளான், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், முந்திரி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கவும். இத்துடன் தயாராக வைத்துள்ள இடியாப்ப சேவையை உதிர்த்துக் கலக்கிவிட்டு தேங்காய்த்துருவல், தேவையான அளவு உப்பு சேர்த்து, ஒரு நிமிடம் வேகவிட்டு பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையைத் தூவி இறக்கவும்.

No comments:
Post a Comment