ஸ்மோக்டு பிரிஞ்சால் வித் மஷ்ரூம்
ஸ்மோக்டு பிரிஞ்சால் வித் மஷ்ரூம்
தேவையானவை:
மொட்டுக் காளான் - 100 கிராம்
பெரிய கத்திரிக்காய் - 150 கிராம்
பெரிய வெங்காயம் - 50 கிராம்
காய்ந்த மிளகாய் - 3
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
புளி - ஒரு எலுமிச்சைப்பழம் அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - சிறிதளவு
செய்முறை:
கத்திரிக்காய்களைச் சுற்றி சிறிதளவு எண்ணெய் தடவி, தீயில் சுட்டுக்கொள்ளவும். பிறகு அதன் காம்பை நீக்கி, தோலை உரித்துவிட்டு சதைப்பகுதியை மசித்துக்கொள்ளவும். புளியை தண்ணீரில் கரைத்து பத்து நிமிடம் ஊற வைக்கவும். காளானை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து பொரிந்தவுடன், நறுக்கிய வெங்காயம், இரண்டாக உடைத்த காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். இதனுடன் நறுக்கிய காளான், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வேகும் வரை வதக்கவும். இத்துடன் மசித்த கத்திரிக்காய் சேர்த்துக் கிளறவும். பிறகு புளிக்கரைசலை ஊற்றி, இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கினால், சுவையான ஸ்மோக்டு பிரிஞ்சால் வித் மஷ்ரூம் கிரேவி தயார்.

No comments:
Post a Comment