Wednesday 28 September 2016

காளான் ஸ்டஃப் பார்பிக்யு

காளான் ஸ்டஃப் பார்பிக்யு

காளான் ஸ்டஃப் பார்பிக்யு

 

தேவையானவை:

 வினிகர் - நான்கு டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 மிளகு  - அரை டீஸ்பூன்

 காளான் - அரைகிலோ

 

ஸ்டஃப்  செய்ய :

 வேக வைத்த உருளைக்கிழங்கு  -   200 கிராம்

 இஞ்சி-பூண்டு விழுது -2 டீஸ்பூன்

 சீஸ் - 2 டேபிள் ஸ்பூன்

 சீரகத்தூள் - 2 டீஸ்பூன்

 கொத்தமல்லித்தழை -சிறிதளவு

 கஸூரி மேத்தி - ஒரு டீஸ்பூன்

 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - மூன்று

 வெண்ணெய்-100 கிராம்

 

செய்முறை:

காளனை நன்கு சுத்தம் செய்து, அதன் தண்டுப் பகுதியை நீக்கி விட்டு கிண்ணம் போன்ற தலைப்பகுதியை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பவுலில் வினிகர், மிளகு, உப்பு, சுத்தம் செய்த காளானைச் சேர்த்து கலந்து 10 நிமிடம் ஊறவிடவும். ஸ்டஃப் செய்யக் கொடுத்துள்ள பொருட்களை எல்லாம் சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். அதனை ஊறவைத்த காளானின் கிண்ணம் போன்ற பகுதியில் வைத்து ஸ்டஃப் செய்து விடவும். இதனை ஸ்கீவரில் (மரக்கைப்பிடியிலான நீளமான இரும்புக்கம்பி) சொருகி கிரில் அடுப்பில் வைத்து 30 நிமிடம் கிரில் செய்யவும்.

கிரில் அடுப்பு இல்லாதவர்கள் தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு காளானை இருபுறமும் வேகவைத்து ஸ்கீவரில் குத்திப் பரிமாறலாம்.

No comments:

Post a Comment