பீட்ரூட் கோசம்பரி
பீட்ரூட் கோசம்பரி
தேவையானவை:
பீட்ரூட் - 250 கிராம்
பாசிப்பருப்பு - 50 கிராம்
தேங்காய்த்துருவல் - 25 கிராம்
பச்சைமிளகாய் - 2
எலுமிச்சைச்சாறு - 2 டேபிள்ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
செய்முறை:
பீட்ரூட்டை மீடியம் சைஸ் துண்டுகளாக்கவும். வெங்காயம் மற்றும் பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பாசிப்பருப்பை நன்றாகக் கழுவி ஒரு மணி நேரம் ஊறவைத்து, தண்ணீரை வடிக்கவும். ஒரு பவுலில் பாசிப்பருப்பு (வேக வைக்க வேண்டாம்), பீட்ரூட், தேங்காய்த்துருவல், வெங்காயம், பச்சைமிளகாய், எலுமிச்சைச்சாறு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி, இதன் மேல் விருப்பப்பட்டால் கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

No comments:
Post a Comment