Wednesday, 28 September 2016

நீர் தோசை

நீர் தோசை

நீர் தோசை

 

தேவையானவை:

 

 பச்சரிசி - 250 கிராம்

 தேங்காய்த்துருவல் - 75 கிராம்

 தண்ணீர் - தேவையான அளவு 

 எண்ணெய், உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

 

பச்சரிசியை 3 மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை வடிகட்டி மிக்ஸியில் தேங்காய்த்துருவல், போதுமான அளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இத்துடன் உப்பு, தண்ணீர் சேர்த்து ரவா தோசை மாவு பதத்துக்கு கலக்கவும். இனி மாவை ஒரு கரண்டி எடுத்து, சூடான தோசைக்கல்லில் ஊற்றி ஒரு சுழற்று சுழற்றவும். இருபுறமும் எண்ணெய் விட்டு தோசையை சுட்டு எடுக்கவும். இதற்கு தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி சுவையாக இருக்கும்.

No comments:

Post a Comment