Monday, 26 September 2016

தயிர் சாதம்

தயிர் சாதம்

தயிர் சாதம்

 

தேவையானவை:

 சாதம் - 200 கிராம்

 புளிக்காத தயிர் - ஒரு டீஸ்பூன்

 கேரட் - 1

 பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

 பச்சைமிளகாய் - 2

 காய்ச்சிய பால் - இரண்டரை கப்

 கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு

 கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்

 உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்

 இஞ்சி - ஒரு டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

 எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

 கடுகு - சிறிதளவு

 உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

கேரட்டை துருவி தனியே வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி, கொத்தமல்லித்தழை, பச்சைமிளகாய் மற்றும் பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இவை எல்லாம் நன்கு வதங்கியதும், வேகவைத்த சாதத்தை தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலக்கவும். சாதம் சூடு ஆறியதும், புளிக்காத தயிர் மற்றும் பால் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

 

குறிப்பு:

தயிர் சாதம் செய்தவுடனே... சாப்பிடுவதாக இருந்தால், தயிர் அதிகம் சேர்க்கலாம். அதுவே மதியம் சாப்பிடுவதற்கு என்றால், பாலை அதிகம் சேர்க்கவும். அப்போதுதான் தயிர் சாதம் புளிக்காது.

No comments:

Post a Comment