Wednesday 28 September 2016

சிக்கன் பர்கர்

சிக்கன் பர்கர்

சிக்கன் பர்கர்

 

தேவையான பொருட்கள் :

 எலும்பில்லாத சிக்கன் - அரைக் கிலோ

 ஃப்ரெஷ் ப்ரெட்  - 3 ஸ்லைஸ்

  (மீடியம் சைஸ்)

 இஞ்சி - பூண்டு விழுது - 4  டீ ஸ்பூன்

 மிளகாய்த்தூள்  - 2  டீஸ்பூன்

 மிளகுத்தூள் - 1  டீஸ்பூன்

 பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1

 ரோஸ் மேரி - அரை  டீஸ்பூன்

 பர்கர் பன் - 4

 வட்ட வடிவில் வெட்டிய வெங்காயம் - 1

 வட்ட வடிவில் வெட்டிய குடமிளகாய் - 1

 சீஸ்  - 4 துண்டு

 வெண்ணெய் - 100 கிராம்

 

செய்முறை:

சிக்கனை சுத்தம் செய்து மிக்ஸியில் நைசாக அரைத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், ஃப்ரெஷ் ப்ரெட்  ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை சிக்கனுடன் கலந்து வடை மாவு பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும். கிரில் சூடானதும் வெண்ணெய் தடவி பர்கர் பன்னை இரண்டாக வெட்டி, அதன் மேல் வைத்து லேசாக சூடேற்றவும் . சூடான பர்கர் பன்னில் செய்து வைத்துள்ள சிக்கன் கலவையை வைத்து வட்டமாக வெட்டிய வெங்காயம் , குடமிளகாயை வைத்து அலங்கரித்து ரோஸ் மேரி இலை சீஸ் தூவி மற்றொரு பர்கர் பன் பாகத்தால் மூடி, பன்னின் மேல் வெண்ணெய் தடவி, கிரில் செய்து சாஸ் உடன் பரிமாறவும்.

 

No comments:

Post a Comment