Tuesday, 27 September 2016

கோங்குரா சட்னி

கோங்குரா சட்னி

கோங்குரா சட்னி

 

தேவையானவை:

 புளிச்சக்கீரை - ஒரு கட்டு

 நல்லெண்ணெய் - 100 மில்லி

 மல்லித்தூள் (தனியாத்தூள்) -

 ஒரு டேபிள்ஸ்பூன்

 வெந்தயம் -  2 டீஸ்பூன்

 உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்

 காய்ந்த மிளகாய் - 7

 பச்சைமிளகாய் - 2

 பூண்டு - 10 பல்

 உப்பு - தேவையான அளவு

 

செய்முறை :

புளிச்சக்கீரையை மண், தூசு இல்லாமல் சுத்தம் செய்யவும். வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி, உப்பு தவிர, கொடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்துப் பொருட்களையும் சிவக்க வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்து தனியே வைத்துக் கொள்ளவும். மீதம் இருக்கும் எண்ணெயை மற்றொரு வாணலியில் ஊற்றி சூடானதும், அரைத்த கலவையை உப்புடன் சேர்க்கவும். எண்ணெய் பிரிந்து கலவை திரண்டு வரும் வரை, மெதுவாகக் கிளறி இறக்கினால், சுவையான கோங்குரா சட்னி தயார்.

No comments:

Post a Comment