Tuesday, 27 September 2016

பேக்டு பீன்ஸ் ஆன் ரோஸ்ட்

பேக்டு பீன்ஸ் ஆன் ரோஸ்ட்

பேக்டு பீன்ஸ் ஆன் ரோஸ்ட்

 

தேவையானவை:

 பிரெட்- 4

 டேபிள் பட்டர்- 2 டேபிள்ஸ்பூன்

 பூண்டு - 6 பல்

 பெரிய வெங்காயம் - ஒன்று

 சில்லி ஃபிளேக்ஸ் - அரை டீஸ்பூன்

 குடமிளகாய் - ஒன்று

 ரெட் சில்லி சாஸ்- ஒரு டேபிள்ஸ்பூன்

 பேக் செய்யப்பட்ட‌ பீன்ஸ் அல்லது

( ஏதாவது ஒரு சுண்டல் வகை)

- 200 கிராம்

 பிளாக் ஆலிவ் - ஒரு டேபிள்ஸ்பூன்

 மயோனைஸ்- ஒரு டேபிள்ஸ்பூன்

 கொத்தமல்லித்தழை - தேவையான அளவு

 உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு, அதன் மீது பட்டர் தடவி, நன்கு ரோஸ்ட் செய்து தனியே வைத்துக்கொள்ளவும். பூண்டு, வெங்காயம், குடமிளகாய் மற்றும் கொத்தமல்லித்தழையைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வாணலியில் மீதம் இருக்கும் பட்டரை விட்டு மிதமான சூட்டில் உருக விடவும். பிறகு, பொடியாக நறுக்கித் தயாராக வைத்துள்ள பூண்டு, வெங்காயம் இரண்டையும் ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பொடியாக நறுக்கிய குடமிளகாய் சேர்த்து, சில்லி ஃபிளேக்ஸ் உப்பு மற்றும் ரெட் சில்லி சாஸ் சேர்த்து வதக்கவும். பிறகு பேக் செய்யப்பட்ட பீன்ஸ் அல்லது சுண்டல் வகையைச் சேர்க்கவும். இவை அனைத்தும் ஒன்றாக கலந்து ஒரு கூட்டுப் பதத்துக்கு வந்தவுடன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி இறக்கிவைக்கவும். ரோஸ்ட் செய்து தனியே வைத்துள்ள பிரெட்டின் மீது  இதைப்  பரப்பி, இதன் மீது மயோனைஸ், பிளாக் ஆலிவ்  போன்றவற்றை வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.

 

No comments:

Post a Comment