Sunday 20 November 2016

தாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | மட்டன் மிளகு ஈரல் வறுவல்

மட்டன் மிளகு ஈரல் வறுவல்

 

தேவையானவை:

 ஈரல் - 250 கிராம்

 சின்னவெங்காயம் - 5

 பூண்டு - 1 பல்

 மிளகு - 2 டீஸ்பூன்

 சீரகம் - 3 டீஸ்பூன்

 கறிவேப்பிலை - சிறிது

 கடுகு - அரை டீஸ்பூன்

 பட்டை - சிறிய துண்டு

 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன்

செய்முறை:

ஈரலை சிறு துண்டுகளாக நறுக்கி நன்றாகக் கழுவிக்கொள்ளவும். சீரகம், மிளகு இரண்டையும் மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, பட்டை, பூண்டு சேர்த்து தாளித்து, நறுக்கிய சின்னவெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதில் ஈரலைச் சேர்த்து நன்றாகக் கிளறி விட்டு, தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள், மிளகு - சீரகப்பொடி சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு முக்கால் கப் தண்ணீர் சேர்த்து மூடிப்போட்டு 7 நிமிடங்கள் வேகவிடவும்.

ஈரல் வெந்ததும் தண்ணீர் இருந்தால் வற்ற வைத்து எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.

குறிப்பு:

ஈரலை அதிக நேரம் வேகவிட்டால் ரப்பர் போலாகிவிடும். இரும்புச் சத்து மற்றும் கொழுப்பு நிறைந்த இந்த உணவு, ரத்த விருத்தியாக மிகவும் உதவும்.

பாலூட்டும் தாய்மார்கள் தங்கள் உணவில் வெங்காயம் அதிகம் சேர்த்தால் குழந்தைக்கு வாயுத்தொல்லை வரக்கூடும் என்பதால் பத்திய சமையலில் தவிர்க்கலாம்.

No comments:

Post a Comment