Sunday 20 November 2016

தாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | கசாயம்

கசாயம்

தேவையானவை:
 திப்பிலி - 3 துண்டுகள்
 கருடக்கொடி - 2 நீள துண்டுகள்
 சுக்கு - 2 இஞ்ச் நீள துண்டு 
 மாவிலிங்க பட்டை  - 2 ரூபாய் நாணயத்தின் அளவுள்ள துண்டு ஒன்று
 சன்னாயிரு - அரை டீஸ்பூன்
 வெள்ளைப் பூண்டு - 3
 ஓமம் - அரை டீஸ்பூன்
 கருஞ்சீரகம் - அரை டீஸ்பூன்
செய்முறை:
திப்பிலி, கருடக்கொடி, மாவிலிங்க பட்டை, சன்னாயிரு மற்றும் சுக்கை நன்கு தட்டி வைக்கவும், வெள்ளைப்பூண்டை உரித்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் தேவையானவற்றில் கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து ஒன்ற்ரை கப் தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். பிறகு, ஆற வைத்து வடிகட்டி பருக கொடுக்கவும். இந்த மருந்திலிருக்கும் குணங்களும் சத்துக்களும் தாய்ப்பால் மூலமாக குழந்தைகளுக்கு சென்று சேரும். குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணம், வயிற்று உபாதைகளை குறைக்கும் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை தரும். ஜுரம் வர விடாமல் தடுக்கும், ஜலதோஷத்துக்கு ஏற்ற மருந்து. பிள்ளை பெற்றவர்கள் மட்டுமில்லாமல் மற்ற வயதினரும் வாரம் ஒரு முறை செய்து பருகலாம்.



No comments:

Post a Comment