Thursday, 6 October 2016

மட்டன் வடை

மட்டன் வடை

மட்டன் வடை

 

தேவையானவை:

 

எலும்பில்லாமல் கொத்திய ஆட்டுக்கறி (மட்டன்) - 200 கிராம்

கடலைப்பருப்பு - 50 கிராம்

சோம்பு - 10 கிராம்

கரம்மசாலாத் தூள் - 2 கிராம்

பூண்டு - 50 கிராம்

பச்சைமிளகாய் - 3

கறிவேப்பிலை - 3 ஈர்க்கு

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

சீரகம் - 5 கிராம்

வெங்காயம் - 25 கிராம்

பொட்டுக்கடலை (லேசாகப் பொடிக்கவும்) - 20 கிராம்

எண்ணெய்- பொரிக்கத் தேவையான அளவு

பெருங்காயம்- 2 கிராம்

உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

 

ஒரு பவுலில் கடலைப்பருப்பு, சோம்பு, சீரகம், பச்சைமிளகாய் சேர்த்து ஊறவைத்து பின்பு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். இத்துடன் கொத்திய ஆட்டுக்கறியையும் போட்டு அரைத்து தனியாக வைக்கவும். பொட்டுக்கடலை, கரம் மசாலாத்தூள், பெருங்காயம் சேர்த்து தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, பூண்டு இவற்றைப் பொடியாக நறுக்கி, உப்பு சேர்த்துக் கொள்ளவும். இனி எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து சிறு உருண்டைகளாகப் பிடித்து, தட்டையாகத் தட்டவும். இதை எண்ணெயில் பொரித்து  சூடாகப் பரிமாறவும்.

 

No comments:

Post a Comment