Thursday 6 October 2016

மட்டன் அடை

மட்டன் அடை

மட்டன் அடை

 

தேவையானவை:

 

புழுங்கலரிசி - 200 கிராம்

கடலைப்பருப்பு - 100 கிராம்

துவரம்பருப்பு - 100 கிராம்

பாசிப்பருப்பு - 20 கிராம்

கொத்திய ஆட்டுக்கறி (மட்டன்) - 200 கிராம்

சோம்பு - 20 கிராம்

சீரகம் - 20 கிராம்

காய்ந்த மிளகாய் - 20 கிராம்

தேங்காய் - 50 கிராம்

இஞ்சி - 30 கிராம்

பூண்டு - 30 கிராம்

சின்னவெங்காயம் - 50 கிராம்

கறிவேப்பிலை - 20 கிராம்

கொத்தமல்லித்தழை - 20 கிராம்

பெருங்காயம்- 2 கிராம்

உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

 

புழுங்கலரிசியை தனியாகவும், கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பை ஒன்றாகவும் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து இறக்கவும். பிறகு புழுங்கலரிசி, பருப்புகளுடன், காய்ந்த மிளகாய், மட்டன், சீரகம், சோம்பு சேர்த்து கிரைண்டரில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். இத்துடன் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, தேங்காய், வதக்கிய சின்னவெங்காயம், பெருங்காயம், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, எண்ணெய் தடவி மாவை ஊற்றி அடைகளாகத் தட்டி எடுத்து சூடாகப் பரிமாறவும்.

 

No comments:

Post a Comment