Sunday 2 October 2016

ரஸ்டிக் ஸ்டைல் மட்டன் பிரியாணி

ரஸ்டிக் ஸ்டைல் மட்டன் பிரியாணி

ரஸ்டிக் ஸ்டைல் மட்டன் பிரியாணி

 

தேவையானவை:

 

பாஸ்மதி - 4 கப்

நறுக்கிய வெங்காயம் - 2

நறுக்கிய தக்காளி - 2

கறிவேப்பிலை - சிறிதளவு

தயிர் - 1/2 கப்

நெய் - 2 டேபிள்ஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

புதினா, கொத்தமல்லித்தழை - சிறிதளவு

 

வேகவைக்க:

 

மட்டன் - 1/2 கிலோ

காய்ந்த மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்

இஞ்சி-பூண்டு விழுது - 1 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

 

அரைக்க:

 

காய்ந்த மிளகாய் - 2

பச்சை மிளகாய் - 2

சின்ன வெங்காயம் - 10

பூண்டு - 10

சோம்பு - 1 டீஸ்பூன்

கிராம்பு - 2

ஏலக்காய் - 2

இஞ்சி - 1 சிறுதுண்டு

புதினா - 1 கைப்பிடி

 

தாளிக்க:

 

பிரியாணி இலை - 2

கிராம்பு - 3

பட்டை - 1 துண்டு

ஏலக்காய் - 2

சோம்பு - 1 டீஸ்பூன்

 

செய்முறை:

 

குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு வேக வைக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு சிறிது உப்பு மற்றும் நீர் விட்டு 3 விசில் வரை வேக வைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நைசாக அரைக்கவும். அரிசியைக் கழுவி 10 நிமிடம் ஊற வைத்து தண்ணீரை வடிக்கவும். பிறகு, வாணலியில் 1 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு அரிசியை 5 நிமிடம் வதக்கித் தனியாக வைக்கவும். வேகவைத்த மட்டனிலிருந்து மட்டனைத் தனியாகவும் தண்ணீரை தனியாகவும் எடுத்து வைக்கவும்.

மீதமுள்ள நெய்+எண்ணெயை குக்கரில் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை, அரைத்த மசாலா, தக்காளி, மட்டன், தயிர் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாகப் போட்டு வதக்கவும். 4 கப் அரிசிக்கு 6 கப் தண்ணீர் வைக்க வேண்டும். மட்டன் வேகவைத்த நீரைச் சேர்த்துக் கொள்ளும். போதவில்லை எனில், நீர் சேர்த்துக் கொதிக்க விடவும். உப்பு மற்றும் புதினா சேர்க்கவும். ஆவி போனவுடன் கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

 

No comments:

Post a Comment