Sunday 2 October 2016

சில்லி பனானா ப்ளாஸம்

சில்லி பனானா ப்ளாஸம்

சில்லி பனானா ப்ளாஸம்

 

தேவையானவை:

 

வாழைப்பூ - 30 (முழு பூவின் உள்ளிருக்கும் தனித்தனி பூக்கள்) இஞ்சி-பூண்டு (பொடியாக நறுக்கவும்) - ஒன்றரை டேபிள்ஸ்பூன்

பச்சை மிளகாய் - 3

காஷ்மீரி மிளகாய்த்தூள்  - அரை டீஸ்பூன்

மிளகுத்தூள்  - 1/4 டீஸ்பூன்

முட்டை வெள்ளைக்கரு - 1

சோளமாவு - 2 டேபிள்ஸ்பூன்

சோயா சாஸ் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்

உப்பு  - தேவையான அளவு

 

சாஸ் செய்ய தேவையானவை:

நறுக்கிய வெங்காயம்  - 2

நறுக்கிய கேப்ஸிகம் - 1

நறுக்கிய இஞ்சி-பூண்டு - 1 டீஸ்பூன்

காஷ்மீரி மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

தண்ணீர் - 1 கப்

சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்

தக்காளி சாஸ்  - ஒரு டேபிள்ஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

 

இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், ஆகியவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும். வாழைப்பூ தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகக் கலக்கிக் கொள்ளவும். இதில் இஞ்சி-பூண்டு சாஸை சேர்த்துக் கலக்கவும். வாழைப்பூக்களை இதில் சேர்த்துக் கலக்கவும். பிறகு 15 நிமிடங்களுக்கு இதை ஃபிரிட்ஜில் வைத்து எடுத்து ஆற வைக்கவும். பிறகு எண்ணெயைக் கொதிக்க வைத்து, அதில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

 

சாஸ் செய்முறை:

 

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், கேப்சிகம் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும், நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். பின்னர் ஒரு கப் தண்ணீரில் காஷ்மீரி மிளகாய்த்தூள் கலந்து இதில் சேர்க்கவும். கொதித்ததும், சோயா மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பின்னர் பொறித்து வைத்துள்ள வாழைப்பூவைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். தண்ணீர் வற்றும் வரை வாணலியை மூடி வைக்கவும். நன்றாக வற்றியதும் இறக்கிவிடலாம். இதனை ஃப்ரைட் ரைஸ் மற்றும் நூடுல்ஸுடன் பரிமாறலாம்.

 

No comments:

Post a Comment