Tuesday, 4 October 2016

ஜீமன் தால்

ஜீமன் தால்

ஜீமன் தால்

 

தேவையானவை:

 

 துவரம்பருப்பு - அரை கப்

 தக்காளி - ஒன்று

 புளி - சிறிய எலுமிச்சை அளவு

 பிரிஞ்சி இலை - ஒன்று

 கிராம்பு - 2

 ஏலக்காய் - 2

 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

 மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்

 கடுகு - அரை டீஸ்பூன்

 சீரகம் - அரை டீஸ்பூன்

 தண்ணீர், உப்பு - தேவையான அளவு

 கொத்தமல்லித்தழை - சிறிதளவு

 எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

 

செய்முறை:

 

பிரஷர் குக்கரில் துவரம்பருப்பு, நறுக்கிய தக்காளி, போதுமான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிட்டு எடுக்கவும். பிரஷர் நீங்கியதும் மத்தால் பருப்பை நன்கு மசித்துக் கொள்ளவும். புளியை அரை கப் தண்ணீரில் ஊறவைத்து சாறு எடுத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரிஞ்சி இலை, கிராம்பு, ஏலக்காய், கடுகு, சீரகம் சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி ஒரு கப் தண்ணீர் விட்டு பச்சை வாசனை போக வேகவிடவும். பிறகு புளிக்கரைசல், மசித்த பருப்பு, உப்பு சேர்த்து வேகவிடவும். நார்மல் சாம்பாரை விட சற்று தெளிவாக இருக்கும். பிறகு தீயைக் குறைத்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கலவையை வேகவிடவும். கலவை வெந்து எண்ணெய் பிரிந்து வந்ததும், கொத்தமல்லித்தழை தூவி, இறக்கி சூடான சாதம், அப்பளத்துடன் பரிமாறவும்.

 

 

No comments:

Post a Comment