மாம்பழ லட்டு
மாம்பழ லட்டு
தேவையானவை:
மாம்பழம் - 100 கிராம்
பனீர் - 100 கிராம்
மைதா - 5 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன் (சுவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளவும்)
நெய் - 2 டேபிள்ஸ்பூன்+ ஒரு டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு - அலங்கரிக்க
செய்முறை:
மாம்பழத்தின் தோல் நீக்கி சதைப்பகுதியை மட்டும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பனீரை சின்ன கியூப்களாக நறுக்கி, இத்துடன் மாம்பழத்துண்டுகளைச் சேர்த்து தண்ணீர் விடாமல் மிக்ஸியில் பேஸ்டாக அரைத்து வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து, நெய் விட்டு சூடானதும், மைதா சேர்த்து சில நிமிடம் அடிப்பிடிக்காமல், கருகாமல் வறுக்கவும். இதில் அரைத்து வைத்த மாம்பழக் கலவையை சேர்த்து குறைந்த தீயில் ஒரு நிமிடம் கிளறி, பின் சர்க்கரை சேர்த்துக் கிளறவும். மாம்பழக்கலவை கெட்டியாகி சுருண்டு வரும்போது, நெய் விட்டு கிளறவும். இனி அடுப்பை அனைத்து கலவையை ஆறவிட்டு உருண்டைகளாகப் பிடித்து மேலே முந்திரிப் பருப்பை வைத்தால் லட்டு ரெடி.

No comments:
Post a Comment