மாம்பழ கஸ்டர்ட்
மாம்பழ கஸ்டர்ட்
தேவையானவை:
மாம்பழம் - 100 கிராம்
கஸ்டர்ட் பவுடர் (வெனிலா ஃப்ளேவர்) - 10 கிராம் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்)
பால் - 250 மில்லி
ஃப்ரெஷ் க்ரீம் - 240 மில்லி
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன் (சுவைக்கேற்ப கூட்டியோ குறைத்தோ கொள்ளலாம்)
செய்முறை:
மாம்பழத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக்கொள்ளவும். இதில் இருந்து இரண்டு டேபிள்ஸ்பூனை தனியாக எடுத்து வைக்கவும். மீதம் இருக்கும் சதைப்பகுதியை மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட்டாக தண்ணீர் விடாமல் அரைத்து வைக்கவும். 50 மில்லி பாலை கஸ்டர்ட் பவுடரோடு சேர்த்து, கட்டி விழாமல் கலக்கவும். அடுப்பில் கடாயை வைத்து மீதியிருக்கும் பாலை ஊற்றி, காய்ச்சவும். பால் கொதித்ததும், கலந்து வைத்திருக்கும் கஸ்டர்ட் பவுடர் பால் கலவையை, மெதுவாகக் கலந்து, முட்டை அடித்துக் கலக்கும் கரண்டியால் கட்டி விழாமல் கிளறவும். இதில் சர்க்கரையைச் சேர்த்து உடனே அடுப்பை அணைத்து அரைத்த மாம்பழ பேஸ்ட், க்ரீம் சேர்த்து நன்கு கலக்கவும். கலவை நன்கு குளிர்ந்ததும் ஃப்ரிட்ஜில் வைக்கவும். பரிமாறும் முன்பு நறுக்கி வைத்திருக்கும் மாம்பழத் துண்டுகளைப் போட்டுப் பரிமாறவும்.

No comments:
Post a Comment