Saturday 8 October 2016

பனங்காய் பணியாரம்

பனங்காய் பணியாரம்

பனங்காய் பணியாரம்

 

தேவையானவை:

 

 பனம்பழம்-2

 கோதுமை மாவு-அரை கிலோ

 சர்க்கரை-400 கிராம்

 உப்பு-தேவையான அளவு

 தண்ணீர்-தேவையான அளவு

 தேங்காய் எண்ணெய்-பொரிக்க

 

செய்முறை:

 

பனம்பழத்தைத் தோல் உரித்து உள்ளே உள்ள கொட்டையை நீக்கி விட்டு சதைப்பகுதியை மட்டும் (நார் நீக்கி) ஒரு பாத்திரத்தில் இட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அல்வா பதத்துக்குப் பிசையவும். அடுப்பில் தாச்சியை (இரும்பு கடாய்) வைத்து பிசைந்த பனம்பழம், சர்க்கரை, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, பச்சை வாடை போகும் வரை கிளறி ஆற வைக்கவும். நன்றாக ஆறியதும், இதில் கோதுமை மாவை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து கையில் ஒட்டாத பதம் வரும் வரை குழைக்கவும். சூடான எண்ணெயில் இக்கலவையை சிறு சிறு உருண்டைகளாகப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுத்து எண்ணெயை வடித்தால்... ஆரோக்கியமான, சுவையான பனங்காய் பணியாரம் ரெடி. ஆற வைத்து சுவைக்கவும்.

 

 

No comments:

Post a Comment