Sunday 9 October 2016

ஆலுமட்டர் புலாவ்

ஆலுமட்டர் புலாவ்

ஆலுமட்டர் புலாவ்

 

என்னென்ன தேவை?

 

வடித்த பாஸ்மதி சாதம் - 1 கப்,

தக்காளி -2,

கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன்,

பச்சைப் பட்டாணி - 1 கைப்பிடி,

உருளைக்கிழங்கு - 1,

வெங்காயம் - 1,

மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்,

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,

தயிர் - தேவைக்கு, இஞ்சி,

பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,

பட்டை, லவங்கம் - சிறிது,

எண்ணெய் - தேவைக்கு,

புதினா, கொத்தமல்லி - அலங்கரிக்க

உப்பு - தேவைக்கு.

 

எப்படிச் செய்வது?

 

பாஸ்மதி சாதத்தில் கரம் மசாலா தூள் சேர்த்து கிளறி வைக்கவும். உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணியை வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் தாளித்து நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் பட்டாணி, உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும். மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறவும். பிறகு தயிர் சேர்த்து கிளறி சாதத்தையும் சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும். விரும்பினால் புதினா, கொத்தமல்லி லேசாக சேர்க்கலாம்.

No comments:

Post a Comment