Sunday 9 October 2016

சப்பாத்தி நூடுல்ஸ்

சப்பாத்தி நூடுல்ஸ்

சப்பாத்தி நூடுல்ஸ்

 

என்னென்ன தேவை?

 

சப்பாத்தி  2,

வெண்ணெய்  1 டேபிள்ஸ்பூன்,

வெங்காயம் (பொடியாக நறுக்கியது)  2,

பொடியாக நறுக்கிய பூண்டு  1 டேபிள் ஸ்பூன்,

நீளமாக நறுக்கிய குடைமிளகாய்  1, 2, 

தக்காளியின் விழுது,

பாவ் பாஜி மசாலா  1 டீஸ்பூன்,

பொடியாக நறுக்கிய லீக்ஸ்   2,

உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள்  தேவைக்கேற்ப,

கருப்பு உப்பு  சிறிது.

 

எப்படிச் செய்வது?

 

வெண்ணெயை சூடாக்கி, வெங்காயம் வதக்கவும்.  பிறகு குடைமிளகாய் சேர்க்கவும். வெங்காயம் கண்ணாடி மாதிரி ஆனதும் பூண்டு, தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து 5 நிமிடங்களுக்கு வதக்கவும். கருப்பு உப்பு, பாவ் பாஜி மசாலா, உப்பு  சேர்த்து நன்கு கிளறவும். சப்பாத்தியை நீளமான துண்டுகளாக வெட்டி அதில் சேர்த்துப் பிரட்டவும். கடைசியாக லீக்ஸ் தூவி இறக்கவும்.

No comments:

Post a Comment