Saturday 8 October 2016

ஸ்பினாச் அண்ட் மஷ்ரூம் லசாங்கா

ஸ்பினாச் அண்ட் மஷ்ரூம் லசாங்கா

ஸ்பினாச் அண்ட் மஷ்ரூம் லசாங்கா

 

தேவையானவை:

 

 இன்ஸ்டன்ட் லசாங்கா - 8 ஷீட்ஸ்

 ஸ்பினாச்(பாலக்கீரை) - 2 கப்

 மஷ்ரூம் - 200 கிராம் (மீடியம் சைஸில் நறுக்கியது)

 மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)

 தக்காளி சாஸ் - 2 கப்

 மொசரல்லா சீஸ் - 125 கிராம் அல்லது துருவிய சீஸ்

 ஆலிவ் ஆயில் அல்லது வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

 உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு

 டிரை இத்தாலியன் ஹெர்ப்ஸ் -அலங்கரிக்க (விருப்பம் இருந்தால்)

 

செய்முறை:

 

மொசரல்லா சீஸ் என்பது பீட்ஸாக்களில் சேர்க்கப்படுகிறது. நீங்கள் சாப்பிடும் போது சவ்வு போன்ற மெலிதான இழுவைத் தன்மையைத் தரக்கூடியது. மொசரல்லா கிடைக்காவிட்டால், வழக்கமான சீஸைத் துருவி சேர்த்துக் கொள்ளவும். டேஸ்ட் மாறுபடாது. பேக்கிங் அவனை

350 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு சூடுபடுத்தவும். ஸ்பினாச்சை அலசி ஒரு பாத்திரத்திலிட்டு அடுப்பிலேற்றி ஐந்து நிமிடங்கள் வேக வைத்து, தண்ணீரை இறுத்து பொடிதாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் கடாய் ஏற்றிச் சூடானதும் ஆலிவ் ஆயில் அல்லது வெண்ணெய் ஊற்றி வெங்காயம், மஷ்ரூம் சேர்த்து பத்து நிமிடங்கள் வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாகவும், மஷ்ரூமில் உள்ள நீர் வற்றும் அளவுக்கும் வதக்கி தேவைக்கேற்ப உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கிளறவும். லசாங்காவை உப்பு கலந்த தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் வேக வைத்து தண்ணீர் இறுத்துக் கொள்ளவும்.

 

ஒன்பது இஞ்ச் உள்ள பேக்கிங் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி... முதலில் ஸ்பினாச் மற்றும் மஷ்ரூமில் ஒரு பங்கை எடுத்து செவ்வக வடிவில் பரப்பவும். அதன் மேல் தக்காளி சாஸைப் பரப்பவும். அதன் மேல் ஒரு லசாங்கா ஷீட்டை வைத்து அதன் மேல் துருவிய சீஸ் அல்லது மொசரல்லா சீஸை உருக்கிப் பரப்பவும். இப்படி மீதம் இருக்கும் கலவையை மேலே சொன்னது போல ஒன்றன் மேல் ஒன்றாகப் பரப்பி அலுமினியம் ஃபாயில் ஷீட்டில் வைத்து பேக்கிங் அவனில் 45 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும். அலுமினியம் ஃபாயிலை நீக்கி, ஒரு பிளேட்டில் ஸ்பினாச் அண்ட் மஷ்ரூம் லசாங்காவை வைத்து மீண்டும் பேக்கிங் அவனில் 15 நிமிடங்கள் வைத்து எடுத்தால், சீஸ் எல்லாம் உருகிய லசாங்கா கிடைக்கும். பதினைந்து நிமிடங்கள் ஆற விட்டு, விருப்பப்பட்டால் டிரை இத்தாலியன் ெர்ப்ஸால் அலங்கரித்து துண்டு போட்டுப் பரிமாறவும்.

 

No comments:

Post a Comment