Saturday 8 October 2016

பனீர் புர்ஜி காத்தி ரோல்

பனீர் புர்ஜி காத்தி ரோல்

பனீர் புர்ஜி காத்தி ரோல்

 

தேவையானவை:

 

 சப்பாத்தி - 5

 ஃப்ரோசன் பனீர் க்யூப்ஸ் - 2 கப்

 பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கியது)

 குடமிளகாய் - ஒன்றில் கால் பகுதி (பொடியாக நறுக்கியது)

 எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

 இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்

 சீரகம் - ஒரு டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

 கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்

 எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன்

 

செய்முறை:

 

வெந்நீரில் பனீரைப் போட்டு பத்து நிமிடங்கள் ஊற வைத்து, தண்ணீரை வடித்து பனீரைத் துருவிக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு, சீரகம் போட்டுப் பொரிந்ததும் வெங்காயத்தைச் சேர்த்து, நிறம் மாறும் வரை வதக்கி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். அடுத்து நறுக்கிய குடமிளகாயைச் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். இதில் கரம் மசாலா, மிளகுத்தூள் சேர்த்து, இரண்டு நிமிடங்கள் வதக்கவும். அடுத்து பனீரைச் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி, எலுமிச்சைச்சாறு சேர்த்து இறக்கவும். இக்கலவையை சப்பாத்தியில் ரோல் செய்து பரிமாறவும்.

 

 

No comments:

Post a Comment