Saturday, 1 October 2016

மூலிகை உளுந்தங்களி

மூலிகை உளுந்தங்களி

மூலிகை உளுந்தங்களி

 

தேவையானவை:

 வெள்ளை உளுத்தம் பருப்பு - 300 கிராம்

 வெல்லம் - 250 கிராம்

 நெய் - 200 கிராம்

 சுக்குத்தூள் - ஒரு டீஸ்பூன்

 ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

 அதிமதுரப் பொடி - ஒரு டீஸ்பூன்

 நெல்லிக்காய் பொடி - ஒரு டீஸ்பூன்

 வெந்தயக் கீரைப் பொடி - 3 டீஸ்பூன்

 ஆடாதொடைப் பொடி - ஒரு டீஸ்பூன்

 தேங்காய்ப்பால் - ஒரு டம்ளர்.

தாளிக்க:

 கடுகு - அரை டீஸ்பூன்

 வெந்தயம் - 5

 உடைத்து தோல் நீக்கிய உளுந்து -

  ஒரு டீஸ்பூன்

 எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

 பெருங்காயத்தூள் - சிறிதளவு

 

செய்முறை:

உளுத்தம் பருப்பைக் களைந்து 3 மணி நேரம் ஊற வைத்து மாவாக அரைத்துக் கொள்ளவும். கனமான அடிப்பகுதி உள்ள ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நெய் விட்டு, தேங்காய்ப்பாலையும், தட்டிய வெல்லத்தையும் போட்டுக் கொதிக்க விடவும். அது கொதித்ததும், தூள் மற்றும் பொடிகளைக் கலந்து, உளுந்துமாவைக் கொட்டி நன்றாகக் கிளறிக் கொண்டிருக்கவும். மாவு வெந்து சுருண்டு வரும் பதத்தில் இறக்கவும். தாளிக்க வேண்டியவற்றைச் சேர்த்துத் தாளிக்கவும். நெய் தடவிய பாத்திரத்தில் கொட்டி, தாளித்ததைச் சேர்த்து கலந்து ஆறியதும் உருண்டை பிடித்தால் களி ரெடி.

No comments:

Post a Comment