Sunday 9 October 2016

ஆரஞ்சு புலாவ்

ஆரஞ்சு புலாவ்

ஆரஞ்சு புலாவ்

 

தேவையானவை :

 

பாஸ்மதி ரைஸ் - 2 கப்

 ஆரஞ்சு ஜூஸ் - 1 கப்

 தேங்காய்ப்பால் - 1 கப்

 மெல்லிய வட்டமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1

 வேக வைத்த பச்சைப்பட்டாணி -அரை கப்

 சின்ன சைஸ்களாக நறுக்கிய கேரட், ஃப்ரெஞ்ச் பீன்ஸ் - 1 கப்

 நறுக்கிய புதினா - கால் கப்

 பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - கால் கப்

 பச்சைமிளகாய் - 3

 நறுக்கிய இஞ்சி - 1 டேபிள்ஸ்பூன்

 நறுக்கிய பூண்டு - 1 டேபிள்ஸ்பூன்

 எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

 நெய் - 1 டேபிள்ஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 முந்திரிப் பருப்பு - 5

 பட்டை - அரை இஞ்ச் நீளமுள்ள பீஸ்

 பிரியாணி இலை - 2

 சோம்பு - அரை டீஸ்பூன்

 கிராம்பு - 4

 அன்னாசிப்பூ - 1

 

 

 

செய்முறை:

 

பாஸ்மதி அரிசியைக் கழுவி இரண்டு கப் தண்ணீர் சேர்த்து முக்கால் மணி நேரம் ஊற வையுங்கள். மிக்ஸியில் பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள். கனமான அடிபாகமுள்ள பேனை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் மற்றும் நெய்யைச் சேர்த்து கரம் மசாலா பொருட்களையும் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்குங்கள். இதில் முந்திரி மற்றும் வெங்காயத்தையும் சேர்த்து அவை நிறம் மாறும் வரை வதக்குங்கள்.

 

இஞ்சி-பூண்டு, பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள். கூடவே கேரட், பீன்ஸ், புதினா, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை வரிசையாகச் சேர்த்து வதக்குங்கள். பிறகு ஊற வைத்த அரிசியை தண்ணீர் இறுத்து சேர்த்து அவற்றில் உள்ள ஈரம் போக வதக்குங்கள். இத்துடன் தேங்காய்ப்பால், அரிசி ஊற வைத்த தண்ணீர் சேர்த்து நான்கு நிமிடம் கிளறுங்கள். இதில் பச்சைப்பட்டாணி , ஆரஞ்சு ஜூஸ், உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கிளறுங்கள். அடுப்பை மிதமாக்கி மூடி போட்டு இருபது முதல் இருபத்தி ஐந்து நிமிடம் வரை வேக வைத்து மூடியைத் திறந்தால் ஆரஞ்சு புலாவ் வாசனை ஆளைத் தூக்கும்.

 

 

No comments:

Post a Comment