Thursday 6 October 2016

பலாக்கொட்டைப் புட்டு

பலாக்கொட்டைப் புட்டு

பலாக்கொட்டைப் புட்டு

 

தேவையானவை:

 

பலாக்கொட்டை - 300 கிராம்

உப்பு - சிறிதளவு

தேங்காய்த்துருவல் - 50 கிராம்

கேரட் துருவல் - 50 கிராம்

பச்சரிசி மாவு - ஒரு கைப்பிடி

 

தாளிக்க:

 

கடுகு - அரை டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)

நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

சின்னவெங்காயம் - 8

(பொடியாக நறுக்கவும்)

எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

 

செய்முறை:

 

பலாகொட்டையின் தோலை நீக்கி, வேக வைத்து சூடு ஆறியதும், சின்னச்சின்ன துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். அடுப்பில் எண்ணெய் சட்டியை வைத்து, தாளிக்க வேண்டியதைத் தாளித்து, அரைத்த பலாக்கொட்டைக் கலவை, உப்பு, பச்சரிசி மாவு ஆகியவற்றைச் சேர்த்து, தேவைப்பட்டால், சிறிது தண்ணீர் சேர்த்துக் கிளறி இறக்கவும். இனி புட்டுக் குழலில் தேங்காய்த்துருவல், புட்டுக் கலவை, கேரட் துருவல் என்கிற ரீதியில், மாற்றி மாற்றிக் குழலில் நிரப்பி, ஐந்து முதல் 6 நிமிடம் வரை வேக வைத்து எடுக்கவும். இதை சட்னியோடு சாப்பிட அருமையாக இருக்கும்.

No comments:

Post a Comment