Thursday 6 October 2016

பலாப்பழ மொய்லி

பலாப்பழ மொய்லி

பலாப்பழ மொய்லி

 

தேவையானவை:

 

பலாச்சுளைகள்- 350 கிராம்

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தேங்காய் - 1  (மூன்று முறை பால் எடுத்து தனித்தனியே வைக்கவும்)

நீளமாக நறுக்கிய‌ பெரிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன்

நீளமாக நறுக்கிய‌ இஞ்சி - 1 டேபிள்ஸ்பூன்

பச்சை மிளகாய் - 2 (நீளமாக நறுக்கிக் கொள்ளவும்)

 

தாளிக்க:

 

தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

கடுகு - அரை டீஸ்பூன்

வெந்தயம் - கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

 

செய்முறை:

 

பலாச்சுளைகளை இரண்டாக நறுக்கவும். அடுப்பில் எண்ணெய் சட்டியை வைத்து உப்பு, மஞ்சள்தூள், பலாச்சுளை மற்றும் மூன்றாவது தேங்காய்ப்பாலை, பலாச்சுளைகள் மூழ்கும் அளவுக்குச் சேர்த்து வேக விடவும். ஐந்து நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து ஆறியதும், இதில் ஒரு பகுதியை எடுத்து மிக்ஸியில் சேர்த்து ஒன்றிரண்டாக அடித்து வைக்கவும். அடுப்பில் மற்றொரு எண்ணெய்ச் சட்டியை வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி, பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி, சேர்த்து லேசாக வதக்கவும்.

 

அரைக்காத பலாச்சுளையை இதில் கலந்து இரண்டாவது தேங்காய்ப்பாலை ஊற்றி வேக விடவும். லேசாகக் கொதித்து வரும்போது மிக்ஸியில் அரைத்த பலாச்சுளைக் கலவையைக் கொட்டிக் கலக்கவும். இது கொதித்து வரும்போது முதல் பாலை ஊற்றி லேசான தீயில் கொதிக்க வைக்கவும். அடுப்பில் மற்றொரு எண்ணெய்ச் சட்டியை வைத்து, தாளிக்க வேண்டியதைத் தாளித்து கலவையில் சேர்த்துக் கலக்கி இறக்கவும்.

 

இது... இட்லி, ஆப்பத்துக்கு தொட்டுக்குக்கொள்ள அருமையான சைட்டிஷ்.

 

No comments:

Post a Comment