Saturday 8 October 2016

ஈஸி டொமேட்டோ பாஸ்தா

ஈஸி டொமேட்டோ பாஸ்தா

ஈஸி டொமேட்டோ பாஸ்தா

 

தேவையானவை:

 

 நீளமான பாஸ்தா - 2 கப்

 பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கியது)

 மீடியம் சைஸ் தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)

 பச்சைப் பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன்

 பூண்டு - 3

 இத்தாலியன் மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் - 2 டீஸ்பூன்

 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

 சீரகத்தூள் - அரை டீஸ்பூன்

 கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்

 வெள்ளரிக்காய் - அரை கப் (பொடியாக நறுக்கியது)

 பேசில் இலைகள் அல்லது துளசி இலைகள் - 4 அலங்கரிக்க (விருப்பப்பட்டால்)

 எண்ணெய் - தேவையான அளவு

 உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

 

பாஸ்தாவைக் கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து, இருபது நிமிடங்கள் வேக வைக்கவும். வேக வைத்த நீரை வடித்து, அதில் கால் கப் எடுத்து வைத்துக்கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு சேர்த்து வதக்கி, வெங்காயம் சேர்த்து, நிறம் மாறும் வரை நன்கு வதக்கவும். அடுத்து தக்காளியைச் சேர்த்து தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கி, பாஸ்தா வேகவைத்த நீரைச் சேர்த்துக் கொதிக்க விடவும். அதில், பச்சைப் பட்டாணி, வெள்ளரிக்காய் சேர்த்து வேகவிட்டு பாஸ்தாவைச் சேர்த்துக் கலக்கி இறக்கியபின் இத்தாலியன் ஹெர்ப்ஸ், துளசி இலைகள் தூவிப் பரிமாறவும்.

 

No comments:

Post a Comment