Thursday, 6 October 2016

பலாப்பழ ஐஸ் க்ரீம்

பலாப்பழ ஐஸ் க்ரீம்

பலாப்பழ ஐஸ் க்ரீம்

 

தேவையானவை:

 

 மில்க் மெய்ட் - 400 கிராம்

 பால் - 450 மில்லி

 பிரெட் ஸ்லைஸ் - 3

 பலாச்சுளைகள் - 250 கிராம்

 சுக்குத்தூள் - 1 டீஸ்பூன்

 

செய்முறை:

 

பாத்திரத்தில் பாலைச் சேர்த்து சூடு செய்து வைக்கவும். இதில் மில்க் மெய்டை ஊற்றி நன்கு அடித்துக் கலக்கவும். பிரெட்டின் ஓரங்களை எல்லாம் நீக்கிவிட்டு, மிக்ஸியில் சேர்த்து சிறிது சூடான பாலை ஊற்றி கெட்டியாக அரைக்கவும். இதை பாலில் சேர்த்து நன்கு அடித்துக் கலக்கவும். பலாச்சுளைகளை மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும். இதையும் பாலில் சேர்த்துக் அடித்துக் கலக்கவும். இறுதியாக சுக்குத்தூளைச் சேர்த்துக் கலந்து ஒரு பவுலில் ஊற்றவும். ஒரு பாத்திரத்தில் ஐஸ் வாட்டர் ஊற்றி, அதன் நடுவே பவுலை வைக்கவும். இருபது நிமிடத்தில் பவுலில் உள்ள பால் கலவை லேசாகக் கெட்டியாக ஆரம்பிக்கும். பின்னர் ஃப்ரீஷரில் வைத்து அரை மணி நேரம் கழித்து எடுத்து கலவையை நன்கு அடித்துக் கலக்கி மீண்டும் ஒரு மணி நேரம் ஃப்ரீஷரில் வைக்கவும். பின்பு எடுத்துப் பரிமாறவும்.

 

No comments:

Post a Comment