Thursday, 6 October 2016

சக்கை அவியல்

சக்கை அவியல்

சக்கை அவியல்

 

தேவையானவை

 

லேசாக பழுத்த பலாக்காய் - 200 கிராம்

தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

 

அரைக்க:

 

 தேங்காய் - கால் மூடி

 ப‌ச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்)

 சீரகம் - கால் டீஸ்பூன்

 மஞ்சள்்தூள் - அரை டீஸ்பூன்

 பூண்டு - 4 பல்

 கறிவேப்பிலை - சிறிதளவு

 

செய்முறை:

 

அரைக்கக் கொடுத்தவற்றை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். பலாக்காயை நீளமாக நறுக்கவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அரைத்த கலவை, பலாக்காய், உப்பு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலக்கி வேக விடவும். இடைஇடையே கிண்டி விடவும்.  பின்னர் மூடி போட்டு மிதமான தீயில் பத்து நிமிடம் வேக விடவும். இறக்கும் முன்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து இதைக் கலவையில் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

 

 

No comments:

Post a Comment