Sunday 9 October 2016

வெஜிடபிள் மஞ்சூரியன்

வெஜிடபிள் மஞ்சூரியன்

வெஜிடபிள் மஞ்சூரியன்

 

என்னென்ன தேவை?

 

கேரட், பீன்ஸ், குடைமிளகாய், உருளைக்கிழங்கு - 1/4 கிலோ (அனைத்தும் சேர்ந்து),

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) ,

பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது),

இஞ்சி, பூண்டு - தலா 1 டீஸ்பூன் (பொடியாக துருவியது),

மிகப்பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - 1 கட்டு,

காய்ந்த மிளகாய் - 2 (சுடு தண்ணீரில் ஊற வைத்து அரைக்கவும்),

சோளமாவு - 3 டீஸ்பூன்,

மைதா மாவு - 1 1/2 டீஸ்பூன்,

சோயா சாஸ் - 1 1/2 டீஸ்பூன்,

தக்காளி சாஸ் - 1

டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

 

எப்படிச் செய்வது?

 

உருளைக்கிழங்கை வேக வைத்து உதிர்க்கவும். அதில் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், குடைமிளகாய், உப்பு, சோளமாவு, மைதா சேர்த்து நன்கு பிசைந்து உருண்டையாக செய்து எண்ணெயில் பொரித்தெடுத்து வைக்கவும். மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும். இதில் சிறிது தண்ணீரில் சோள மாவை கரைத்து  ஊற்றவும். தக்காளி சாஸ், சோயா சாஸ், உப்பு சேர்த்து இறக்கும் பொழுது வெங்காயத்தாள் போட்டு கிளறி இறக்கவும். இதில் பொரித்து வைத்த உருண்டைகளை போட்டு நன்கு கிளறி பரிமாறவும்.

No comments:

Post a Comment