Sunday 9 October 2016

மஷ்ரூம் பீஸ் மினி சாண்ட்விச்

மஷ்ரூம் பீஸ் மினி சாண்ட்விச்

மஷ்ரூம் பீஸ் மினி சாண்ட்விச்

 

என்னென்ன தேவை?

 

மஷ்ரூம் - 100 கிராம்,

பட்டாணி - 50 கிராம் (Frozen),

மிகப் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 2,

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2,

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,

உப்பு - தேவைக்கு,

வெண்ணெய் + எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,

கரம்மசாலா - 1/4 டீஸ்பூன்,

தக்காளி - 1 (சிறியது),

இஞ்சிபூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்,

பன் - தேவைக்கு,

மயோனைஸ், கெட்சப் - சிறிதளவு.

 

எப்படிச் செய்வது?

 

மஷ்ரூமை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் + வெண்ணெய் சேர்த்து சூடாக்கி வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, அதில் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பின் மஷ்ரூம், பட்டாணி, தக்காளியை சேர்த்து வதக்கி சிறு தீயில் வைத்து வேகவிடவும். கடைசியாக உப்பு, மஞ்சள் தூள், கரம்மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறி எடுக்கவும்.

 

சாண்ட்விச் செய்ய சின்ன பன்களை இரண்டாக வெட்டி வெண்ணெய் சேர்த்து இருபுறமும் கருகாமல் சூடுபடுத்தி அதில் சிறிது மேயனைஸ், கெட்சப் தடவி செய்து வைத்த மஷ்ரூம் பட்டாணி கலவையை 1 டேபிள்ஸ்பூன் அளவு வைத்து மூடவும். (இதில் காரத்துக்கு பச்சைமிளகாய் மட்டும் சேர்த்துள்ளது. குழந்தைகளுக்கு கொடுப்பதாக இருந்தால் பச்ைசமிளகாயை அரைத்து சேர்க்கவும்.)

No comments:

Post a Comment