Friday, 7 October 2016

கம்பு இனிப்புப் பிடி கொழுக்கட்டை

கம்பு இனிப்புப் பிடி கொழுக்கட்டை

கம்பு இனிப்புப் பிடி கொழுக்கட்டை

 

தேவையானவை:

 

கம்பு - 150 கிராம்

துருவிய கருப்பட்டி - 100 கிராம்

ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய தேங்காய்த்துண்டுகள் - 2 டேபிள்ஸ்பூன் (விருப்பப்பட்டால்)

பொடியாக நறுக்கிய டிரை ஃப்ரூட்ஸ் - சிறிது (விருப்பப்பட்டால்)

 

செய்முறை:

 

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விடாமல் கம்பை பொன்னிறமாக வறுத்து வைக்கவும். அடுப்பை அணைத்து கம்பை ஆற விடவும். இதை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து தனியாக பவுலில் வைக்கவும். இதில் ஏலக்காய்த்தூள், தேங்காய்த்துண்டுகள், டிரை ஃப்ரூட்ஸ், கருப்பட்டி சேர்த்து கட்டியில்லாமல் கைகளால் கலக்கவும். இதில் இரண்டு டேபிள்ஸ்பூன் சூடான நீரை ஊற்றி, மாவு ஈரமாகி அதை எந்த ஷேப்பில் வேண்டுமானாலும் உடையாமல் உருண்டை பிடிக்கலாம் எனும் பதத்துக்கு தண்ணீர் தெளித்துக் கிளறவும். அதிகமாக தண்ணீரை ஊற்றினால் மாவு சொதசொத என்றாகி விடும். கைகளால் மாவை நீள வடிவத்துக்கு பிடித்து, இட்லித் தட்டில் வைத்து பதினைந்து நிமிடம் வேக வைத்து எடுத்துப் பரிமாறலாம்

No comments:

Post a Comment