முருங்கைக்காய்ச் சாறு
முருங்கைக்காய்ச் சாறு
தேவையானவை:
பிரிஞ்சி இலை - 10 கிராம்
மிளகு - 15 கிராம்
ஏலக்காய் - 5 கிராம்
கிராம்பு - 5 கிராம்
சோம்பு - 10 கிராம்
பெரிய வெங்காயம் - 250 கிராம் (பொடியாக நறுக்கவும்)
கொத்தமல்லித்தழைத் தண்டு - 250 கிராம் (பொடியாக நறுக்கவும்)
கறிவேப்பிலை - 25 கிராம்
முருங்கைக்காய் - 2 காய்
(விருப்பமான நீளத்தில் நறுக்கவும்)
பூண்டு - 50 கிராம் (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் - 30 கிராம் (பொடியாக நறுக்கவும்)
பாசிப்பருப்பு - கால் கிலோ (வேக வைத்துக் கொள்ளவும்)
கொத்தமல்லித்தழை - அலங்கரிக்க
எண்ணெய் - 100 மில்லி
உப்பு - தேவையான அளவு
தக்காளி - 200 கிராம் (பொடியாக நறுக்கவும்)
மஞ்சள்தூள் - 10 கிராம்
செய்முறை:
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், பிரிஞ்சி இலை மிளகு, ஏலக்காய், கிராம்பு, சோம்பு சேர்த்துத் தாளிக்கவும். இதில் பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழைத்தண்டு, பூண்டு, கறிவேப்பிலை முருங்கைக்காய், பாசிப்பருப்பு சேர்த்து நன்கு வதக்கி மஞ்சள்தூள், உப்பு போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும். பிறகு இதை வடிகட்டி எடுத்து ஒரு பவுலில் ஊற்றி, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

No comments:
Post a Comment