Sunday, 2 October 2016

செம்மீன் மசாலா ஃப்ரை

செம்மீன் மசாலா ஃப்ரை

செம்மீன் மசாலா ஃப்ரை

 

தேவையானவை:

 செம்மீன் (இறால்) - 250 கிராம்

 இஞ்சி-பூண்டு விழுது - தலா 1 டேபிள்ஸ்பூன்

 மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்

 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

 மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டேபிள்ஸ்பூன் (விருப்பப்பட்டால்)

 கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)

 குடம் புளி - நெல்லிக்காய் அளவு (ஊற வைக்கவும்)

 மெல்லியதாக நறுக்கிய தேங்காய்த்துண்டுகள் - கால் கப்

 பெரிய வெங்காயம் - 2 (ஸ்லைஸ்களாக நறுக்கவும்)

 சின்ன வெங்காயம் - 5 (மெல்லிய வட்டமாக நறுக்கவும்)

 உப்பு - தேவையான அளவு

 கறிவேப்பிலை - சிறிதளவு

 தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

 

செய்முறை:

இறாலைச் சுத்தம் செய்து பாதியளவு இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள், குடம் புளி, தேங்காய்த் துண்டுகள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து கைகளால் நன்கு பிசிறவும். சிறிது தண்ணீர் தெளித்து அடுப்பில் வைத்து இறால் அதிகமாக வெந்துவிடாமல், எடுத்து அதிகப்படியான தண்ணீரை இறுத்து விடவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமானதும், மீதம் இருக்கும் இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, பெரிய வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), கரம் மசாலாத்தூள், சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். எண்ணெய் பிரிந்து வரும் வேளையில் வெந்த இறால், உப்பு சேர்த்து 3 டேபிள்ஸ்பூன் தண்ணீர் விட்டு வேக விடவும். தண்ணீர் வற்றி மசாலாவுடன் இறால் கலந்து வரும் வேளையில், தீயை முற்றிலும் குறைத்துக் கிளறவும். அடுப்பை அணைத்து ரொட்டி மற்றும் சாதத்துடன் பரிமாறவும்.

 

 

No comments:

Post a Comment