கடாய் பனீர்
கடாய் பனீர்
தேவையானவை:
பனீர் 200 கிராம் (சற்று பெரிய துண்டுகளாக்கவும்)
வெண்ணெய் 25 கிராம்
பெங்களூர் தக்காளி 5 (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் 2 (பொடியாக நறுக்கவும்)
பூண்டு 1 (இடித்து வைத்துக்கொள்ளவும்)
இஞ்சி சின்ன நெல்லிக்காய் அளவு (இடித்து வைக்கவும்)
குடமிளகாய் ஒன்றில் பாதி (டைஸ் வடிவத்துக்கு நறுக்கவும்)
வறுத்த கொத்தமல்லி (தனியா) 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் 5 (வறுத்து வைக்கவும்)
கசூரி மேத்தி (உலர்ந்த வெந்தய இலைகள்) அரை டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் அரை டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை அலங்கரிக்க
கருப்பு உப்பு அரை டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை:
பனீர் துண்டுகளை எண்ணெயில் பொரித்தெடுத்து வைக்கவும். மிக்ஸியில் தண்ணீர் விடாமல் கொத்தமல்லி (தனியா), காய்ந்த மிளகாயைச் சேர்த்துப் பொடியாக்கிக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து வெண்ணெய் சேர்த்து உருகியதும், இஞ்சி, பூண்டு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இதில் தக்காளி சேர்த்து கரையும் வரை வதக்கி, பொடி செய்தவற்றைச் சேர்த்து வதக்கவும். பத்து நிமிடம் கழித்து குடமிளகாய், பச்சை மிளகாய், கரம் மசாலாத்தூள், சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும், பனீர் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விடவும். இவை கொதித்ததும் கசூரி மேத்தி, கருப்பு உப்பு, உப்பு, கொத்தமல்லித்தழை தூவி கலக்கி இறக்கிப் பரிமாறவும்.

No comments:
Post a Comment