Sunday, 2 October 2016

அஹனி

அஹனி

அஹனி

 

தேவையானவை:

 ஆட்டுக்கறி (மட்டன்) - அரை கிலோ

 தயிர் - ஒரு கப் (200 கிராம்)

 இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்

 பச்சைமிளகாய் - 5

 கறிவேப்பிலை - தேவையான அளவு

 ரம்ப இலை - ஒன்று

 நெய் - 2 டேபிள்ஸ்பூன்

 தேங்காய் எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்

 பட்டை, ஏலக்காய் - தலா 2

 சின்ன வெங்காயம் - 6 (மூன்றை இரண்டிரண்டாகவும் மீதியை பொடியாகவும் நறுக்கவும்)

 மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை உப்பு - தேவையான அளவு

 முந்திரி - 25, பாதாம் - 10, கசகசா -5 கிராம்

 

செய்முறை :

ஆட்டுக்கறியைக்  கழுவி தண்ணீரை வடித்து விட்டு, இரண்டாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு, மஞ்சள்தூள், பாதி இஞ்சி - பூண்டு விழுது, தயிர், பட்டை, ஏலக்காய் சேர்த்துக் கலந்து வைக்கவும். முந்திரி, பாதாம், கசகசாவை பத்து நிமிடம் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். பின்னர் குக்கரில் நெய், மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம், ரம்ப இலை, கறிவேப்பிலை, மீதம் இருக்கும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக மிதமாக வதக்கவும். இதில் ஆட்டுக்கறிக் கலவையைச் சேர்த்துக் கிளறி அடுப்பைக் சிம்மில் 10 நிமிடம் வேக விடவும்.அடிக்கடி அடுப்பைக் கிளறி விடவும். கறி பாதி வெந்ததும் முந்திரி பேஸ்ட் சிறிது தண்ணீர் சேர்த்து 2 விசில் விட்டு இறக்கவும். நெய் சோறுக்கு சரியான காம்பினேஷன் இந்த அஹனி கறி.

ரம்ப இலை நாகர்கோவில் பகுதியில் சர்வசாதாரணமாக கிடைக்கும். இல்லையெனில், பிரிஞ்சி இலை சேர்த்துக் கொள்ளலாம்

No comments:

Post a Comment