வட்லாப்பம்
வட்லாப்பம்
தேவையானவை:
முட்டை - 15
தேங்காய் - 1
முந்திரிப்பருப்பு, பாதாம், பிஸ்தா - 10 கிராம்
நெய் - ஒரு டீஸ்பூன்
சர்க்கரை - கால் கிலோ
ஏலக்காய் - 5 (பொடி செய்து கொள்ளவும்)
செய்முறை :
முதலில் முந்திரி, பாதாம், பிஸ்தாவை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்து தோல் நீக்கிப் பொடியாக நறுக்கவும். சர்க்கரையை மிக்ஸியில் சேர்த்து பொடியாக்கி வைக்கவும். முட்டையை உடைத்து மிக்ஸியில் ஊற்றி, ஒரு சுழற்று சுழற்றி எடுக்கவும். தேங்காயைத் துருவி பால் எடுத்து வைக்கவும். (துளி தண்ணீர் கூட சேர்க்கக் கூடாது). குக்கரில் வைக்கக் கூடிய அளவுக்கு ஒரு பாத்திரத்தை எடுத்து, அதில் வடிகட்டியை வைத்து, அடித்த முட்டை கலவையை சேர்த்து வடிக்கவும். இத்துடன் தேங்காய்ப்பால், ஏலக்காய்ப் பொடி, சர்க்கரை, முந்திரிப்பருப்பு பாதாம்பருப்பு கலவையைச் சேர்த்து, கட்டியில்லாமல் கலக்கி, நெய் சேர்த்துக் கலக்கவும். இதுதான் வட்லாப்பக் கலவை. குக்கரில் தண்ணீர் விட்டு ஒரு களவாடை (சோற்றுப் பானை இறக்கி வைக்கும் வளையம்) போட்டு அதன்மேல் வட்லாப்பக் கலவைப் பாத்திரத்தை வைத்து மூடவும். இனி குக்கரை மூடி 10 விசில் வரை விடவும். கத்தியால் குத்தி பார்த்தால் தண்ணீரில்லாமல் கேக் மாதிரி வெந்திருந்தால் வட்லாப்பம் ரெடி.

No comments:
Post a Comment