தவா புலாவ்
தவா புலாவ்
தேவையானவை:
பாஸ்மதி அரிசி - 1 கப்
பீன்ஸ், கேரட், குடமிளகாய், பச்சைப் பட்டாணி - 250 கிராம் (பொடியாக நறுக்கவும்)
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்)
மிளகாய்த்துள் - அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
பாவ் பாஜி மசாலாத்தூள் - ஒன்றரை டீஸ்பூன் (டிப்பார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்)
பட்டை - 1
ஏலக்காய் - 2
கிராம்பு - 2
கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைத் துண்டுகள் - சிறிதளவு
பெரிய வெங்காயம் - பொடியாக நறுக்கவும் (அலங்கரிக்க)
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பாஸ்மதியைத் தனியாக வேக வைத்து எடுத்து ஒரு ப்ளேட்டில் கொட்டி முள்கரண்டியால் லேசாகக் கிளறி விட்டுக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, ஏலக்காய், கிராம்பு, இஞ்சி-பூண்டு விழுது, வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இதில் பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் காய்கறிகளைச் சேர்த்து வதக்கி, மிதமான தீயில் வேக விடவும். இதில் மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், பாவ் பாஜி மசாலாத்தூள், உப்பு சேர்த்து லேசாக தண்ணீரைத் தெளித்துக் கிளறி வேக விடவும். எல்லாம் நன்றாக வெந்து பச்சை வாசனை போனதும் கலவையை சாதத்தில் சேர்த்துக் கிளறி சிறிது எலுமிச்சைச் சாற்றை விட்டு வெங்காயம், கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

No comments:
Post a Comment