Saturday 8 October 2016

மொளகூட்டல்

மொளகூட்டல்

மொளகூட்டல்

 

தேவையானவை:

 

 சேனை, வாழைக்காய், பூசணிக்காய் - கால் கிலோ

 பாசிப்பருப்பு - அரை கப்

 மஞ்சள்த்தூள் - கால் டீஸ்பூன்

 உப்பு - சிறிதளவு

 

அரைக்க:

 

 தேங்காய்த்துருவல் - அரை கப்

 சீரகம் - ஒரு டீஸ்பூன்

 காய்ந்த மிளகாய் வற்றல் - 2

 

தாளிக்க:

 

 கடுகு - அரை டீஸ்பூன்

 உளுந்து - அரை டீஸ்பூன்

 பெருங்காயம் - கால் டீஸ்பூன்

 எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

 கறிவேப்பிலை - கொஞ்சம்

 

செய்முறை :

 

பாசிப்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும். அரைக்கக் கொடுத்தவற்றை அரைத்துக் கொள்ளவும். காய்கறிகளைக் கழுவி மீடியம் சைஸில் நறுக்கி, உப்பு சேர்த்து வேக வைக்கவும். அவை 90 சதவிகிதம் வெந்ததும், அரைத்த மசாலாவைச் சேர்த்து, மேலும் ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்தவற்றை தாளித்து வெந்து கொண்டிருக்கும் காய்கறிகளில் கொட்டிக் கிளறி... கொஞ்சம் தேங்காய் எண்ணெயை மேலே விட்டு இறக்கவும்.

சூடான சாதத்தோடு சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும். காய்கறிகளுக்குப் பதிலாக கீரையிலும் இதை செய்யலாம். பிரசவம் ஆன பெண்களுக்கு பத்திய உணவாக இதை சாப்பிடக் கொடுப்பார்கள்.

 

No comments:

Post a Comment