Monday, 26 September 2016

கார ராகி சேமியா

கார ராகி சேமியா

கார ராகி சேமியா

 

தேவையானவை:

 ராகி சேமியா - 75 கிராம்

 பெரிய வெங்காயம் - ஒன்று

 தக்காளி - ஒன்றில் பாதி

 காய்ந்த மிளகாய் - 2

 இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன்

 கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்

 உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்

 எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

 கடுகு - கால் டீஸ்பூன்

 சீரகம் - அரை டீஸ்பூன்

 கறிவேப்பிலை - சிறிதளவு

 தண்ணீர் - தேவையான அளவு

 உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

ராகி சேமியாவை ஐந்து நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஊறவைத்த ராகியை இட்லித் தட்டில் வைத்து 10 நிமிடம் வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம், இஞ்சி விழுது, காய்ந்த மிளகாயைச் சேர்த்து வதக்கவும். இத்துடன் நறுக்கிய வெங்காயத்தைச்  சேர்த்து வதக்கவும். பிறகு, பொடியாக நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும். இதில் வேக வைத்த ராகி சேமியாவை உதிர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறவும். அடுப்பை அணைக்கும் முன்பு பொடியாக நறுக்கிய கறிவேப்பிலையைச் சேர்த்துக் கிளறி இறக்கினால் சுவையான கார ராகி சேமியா தயார்.

 

குறிப்பு:

ராகி சேமியா குழையாமல் இருக்க, இட்லித் தட்டில் வைத்து, வேக வைக்க வேண்டும். ராகி, உடலுக்குப் போதுமான கால்சியம் இரும்புச் சத்து அளிக்கிறது. காய்ந்த மிளகாய்க்குப் பதில் பச்சைமிளகாயையும் சேர்க்கலாம்.

No comments:

Post a Comment