Monday, 26 September 2016

வெஜ் சாண்ட்விச்

வெஜ் சாண்ட்விச்

வெஜ் சாண்ட்விச்

 

தேவையானவை:

 கோதுமை பிரெட் - 4 துண்டுகள்

 பெங்களூர் தக்காளி - ஒன்று

 பெரிய வெங்காயம் - அரை

 குடமிளகாய் - அரை

 வெள்ளரிக்காய் - அரை துண்டு

 வெண்ணெய் - தேவையான அளவு

 மிளகுத்தூள் - தேவையான அளவு

 எண்ணெய், உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

வீட்டில் பிரெட் டோஸ்டர் இருந்தால், அதில் பிரெட்டை டோஸ்ட் செய்து கொள்ளவும். இல்லையெனில், தோசைக்கல்லில் எண்ணெய் சேர்க்காமல் பிரெட்டை இருபுறமும், கருகாமல் சுட்டு எடுக்கவும். பிறகு, பிரெட்டின் ஓரத்தை தனியே நறுக்கி விடவும். வெங்காயம், குடமிளகாய், தக்காளி, வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் நறுக்கிய குடமிளகாய், வெங்காயத்தைச் சேர்த்து லேசாக வதக்கிக் கொள்ளவும். சாண்ட்விச் செய்வதற்கு நமக்கு 2 பிரட் தேவைப்படும். ஒரு பிரெட் துண்டின் மீது சிறிதளவு வெண்ணெயைத் தடவி விடவும். வதக்கி வைத்த வெங்காயத்தையும், குடமிளகாயையும் வெண்ணெய் தடவிய பிரெட்டின் நடுவே வைக்கவும். இதன் மீது வட்டமாக நறுக்கிய தக்காளி, வெள்ளரித் துண்டுகளை வரிசையாக ஒன்றன் மீது ஒன்றாக வைக்கவும். போதுமான அளவு உப்பு மற்றும் மிளகுத்தூளை தூவவும். வெண்ணெய் தடவாத மற்றொரு பிரெட்டால் இதை மூடவும். இதுபோல் மீதமுள்ள 2 பிரெட் துண்டுகளையும் சாண்ட்விச்சாக ரெடி செய்து கொள்ளவும். நான்கு துண்டு பிரெட்களையும் ஒன்றாக அடுக்கி, முக்கோண வடிவத்தில் துண்டு செய்து பரிமாறவும். டொமேட்டோ சாஸ் தொட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

 

குறிப்பு:

பிரெட் டோஸ்ட் செய்ய விரும்பாதவர்கள் ஃப்ரெஷ் பிரெட் கொண்டு, சாண்ட்விச் செய்யலாம். கோதுமை பிரெட்டுக்குப் பதில் ஸ்வீட் பிரெட் அல்லது சால்ட் பிரெட் பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment