ரத்தப் பொரியல்
ரத்தப் பொரியல்
தேவையானவை:
ஆட்டு ரத்தம் - கால் கிலோ
சின்ன வெங்காயம் - 200 கிராம்
மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது
சோம்புத்தூள் - ஒரு டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - சிறிது
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
செய்முறை:
ரத்தத்தில் தண்ணீர் ஊற்றி லேசாக அலசி, தண்ணீரை வடித்து விடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு மற்றும் சோம்புத்தூள் என ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் கழுவி வைத்துள்ள ரத்தத்தைச் சேர்த்து மிதமான தீயில் நன்கு கிளறவும். ரத்தத்தின் நிறம் மாறி கறுப்பானவுடன் கறிவேப்பிலை, தேங்காய்த்துருவல் சேர்த்து கிளறி இறக்கிப் பரிமாறவும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடக் கூடிய சத்தான உணவு, ரத்தப் பொறியல்.

No comments:
Post a Comment