Sunday, 25 September 2016

சுவரொட்டிக் கறி

சுவரொட்டிக் கறி

சுவரொட்டிக் கறி

 

தேவையானவை:

 சுவரொட்டி - கால் கிலோ

 சின்ன வெங்காயம் - 100 கிராம்

 மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்

 கறிவேப்பிலை - சிறிதளவு

 எண்ணெய் - தேவையான அளவு

 

அரைக்க:

 பட்டை - ஒரு துண்டு

 தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்

 சோம்பு - ஒரு டீஸ்பூன்

 

செய்முறை:

அரைக்கக் கொடுத்துள்ளவற்றை தண்ணீர் சேர்க்காமல் அரைத்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி, இத்துடன் சுத்தம் செய்து வைத்துள்ள சுவரொட்டி, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.உள்ளங்கையளவு தண்ணீர் எடுத்துத் தெளித்து மூடி போட்டு சிம்மில் ஐந்து முதல் பத்து நிமிடம் வேகவிடவும். சுவரொட்டி நன்கு வெந்தவுடன் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து வைத்துள்ளதை சேர்த்துப் புரட்டி கறிவேப்பிலை தூவிப் பரிமாறவும். குழந்தைகளுக்கு சுவரொட்டி மிகவும் சத்தான உணவு சாப்பிடவும் எளிதாக இருக்கும்.

No comments:

Post a Comment