மக்ரூன் பிரியாணி
மக்ரூன் பிரியாணி
தேவையானவை:
சிக்கன் - அரை கிலோ (சிறுதுண்டுகளாக நறுக்கியது)
பெரியவெங்காயம் - 6 (நீளமாக நறுக்கியது)
மீடியம் சைஸ் தக்காளி - 4 (நறுக்கியது)
பச்சைமிளகாய் - 10 (கீறியது)
கொத்தமல்லித்தழை - கால் கப் (நறுக்கியது)
புதினா இலை - கால் கப்
எலுமிச்சைப்பழம் - ஒன்று சாறு எடுக்கவும்
இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
தயிர் - ஒரு கப்
நெய் - 100 கிராம்
பட்டை - 3
கிராம்பு - 4
ஏலக்காய் - 4
மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
முந்திரிப்பருப்பு - 6 (அரைத்தது)
கெட்டி தேங்காய்ப்பால் - கால் கப்
மக்ரூன் - 500 கிராம் (அவித்தது)
சுடுநீர் - 3 கப்
செய்முறை:
அகலமான பாத்திரத்தில் நெய் ஊற்றி சூடாக்கவும். பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வெடிக்க விடவும். இத்துடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து 10 நிமிடங்கள் சிவக்கும் வரை வதக்கவும். பிறகு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, சுத்தம் செய்த சிக்கன் துண்டுகள், தக்காளி, பச்சைமிளகாய், புதினா, கொத்தமல்லித்தழை, தயிர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். பிறகு மூன்று கப் சுடுநீர் சேர்த்து நன்றாகக் கலக்கிக் கோழியை வேகவிடவும். சிக்கன் முக்கால் பதம் வெந்ததும் அரைத்த முந்திரி விழுது, தேங்காய்ப்பால் மற்றும் எலுமிச்சைச்சாறு சேர்த்து கலக்கி கொதிக்க விடவும். இத்துடன் அவித்த மக்ரூனை ஒன்றாகச் சேர்த்துக் கலக்கி, சிக்கன் கிரேவியை மக்ரூன் உறிஞ்சும்வரை 5 நிமிடங்கள் சிம்மில் வைத்து, கொதிக்கவிட்டு அடுப்பை விட்டு இறக்கி சூடாக மக்ரூன் பிரியாணியைப் பரிமாறவும்.
பின் குறிப்பு:
சிக்கனுக்கு பதிலாக, மட்டன் அல்லது அரை கிலோ கலந்த காய்கறிகள் சேர்த்து, இதைப் போல் செய்யலாம்.
காய்கறிகள்:
கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், பச்சைப்பட்டாணி, பட்டர் பீன்ஸ், குடமிளகாய், உருளைக்கிழங்கு.

No comments:
Post a Comment