Sunday, 25 September 2016

இடியாப்ப பிரியாணி

இடியாப்ப பிரியாணி

இடியாப்ப பிரியாணி

 

தேவையானவை:

 

 சிக்கன் - அரை கிலோ (சிறிய துண்டுகளாக நறுக்கியது)

 பெரியவெங்காயம் - 6 (நீளமாக நறுக்கியது)

 தக்காளி - 4 (நறுக்கியது)

 பச்சைமிளகாய் - 12 (கீறியது)

 கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி

 புதினா இலை - ஒரு கைப்பிடி

 நெய் - 100 கிராம்

 பட்டை - ஒன்று

 கிராம்பு - 4

 ஏலக்காய் - 4

 இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

 தயிர் - ஒரு கப்

 மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 எலுமிச்சைச்சாறு - ஒரு பழம்

 முந்திரிப்பருப்பு - 10

 தேங்காய்த்துருவல் - 5 டேபிள்ஸ்பூன்

 ரோஸ் எசன்ஸ் - 2 சொட்டு

 இடியாப்பம் - 15

 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

 

செய்முறை:

 

கழுவிய சிக்கனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தயிர், உப்பு சேர்த்து ஊற விடவும். வாய் அகன்ற பாத்திரத்ததில் நெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வெடிக்க விடவும். பெரிய வெங்காயம் சேர்த்து 15 நிமிடங்களுக்கு சிவக்க வறுக்கவும். இஞ்சி-பூண்டு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பாதியளவு புதினா, நறுக்கிய தக்காளி, கீறிய பச்சைமிளகாய் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். இத்துடன் ஊற வைத்த சிக்கன், கொத்தமல்லித்தழை, மீதமுள்ள புதினா சேர்த்து 10 நிமிடங்கள் வதக்கி, ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.

முந்திரிப்பருப்பையும் தேங்காய்த்துருவலையும் மிக்ஸியில் மை போல அரைத்து, ரோஸ் எசன்ஸ் சேர்த்துக் கலக்கி, வெந்துகொண்டிருக்கும் சிக்கன் கலவையில் சேர்த்துக் கொதிக்க விடவும். கலவையில் இருந்து நெய் பிரிந்துவரும் போது இறக்கி ஆறவிடவும். அதே நேரம் சிக்கனும் வெந்திருக்க வேண்டும். இடியாப்பத்தைப் பிய்த்து ஆறிய சிக்கன் குழம்புடன் கலக்கவும். நறுக்கிய கொத்தமல்லித்தழையைத் தூவி தயிர் சட்னியுடன் பரிமாறவும்.

No comments:

Post a Comment